முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை திறப்பு!- தலைவர்கள் புகழாரம்.

வி.பி.சிங் மறையலாம் ஆனால் அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் . வி.பி. சிங் அவர்களின் முழு திருவுருவச்சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.11.2023), சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் திரு.வி.பி. சிங் அவர்களின் முழு திருவுருவச் சிலையை சிறப்பு விருந்தினரான உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ், திரு. வி.பி. சிங் அவர்களின் துணைவியார் திருமதி சீதா குமாரி, மகன் திரு. அஜயா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திறந்து வைத்தார். 

எஸ்.திவ்யா

Leave a Reply