முக்கியமான கனிமங்கள் மீதான உலகளாவிய நடவடிக்கை குறித்த ஜி20 மக்கள் தொடர்பு திட்டத்தை சுரங்க அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

புதுதில்லி பிரகதி மைதானத்தில்  உள்ள பாரத் மண்டபத்தில் “முக்கியமான கனிமங்களின் உலகளாவிய நடவடிக்கையை முன்னெடுப்பதில் அரசு மற்றும் தொழில்துறையின் பங்கு” என்ற தலைப்பில் சுரங்க அமைச்சகம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.  2023, நவம்பர் 29 அன்று நடைபெறும்  இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் / மிஷன் தலைவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள வணிகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொள்வார்கள்.

ஜி20 இன் முக்கிய உறுப்பினராக, முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான முன்முயற்சிகளை இந்தியா முனைப்புடன் மேற்கொண்டுள்ளது. சுரங்க அமைச்சகம் ஏற்கனவே எம்.எம்.டி.ஆர் சட்டத்தில் ஒரு திருத்தத்தை செய்துள்ளது, இது 2023, ஆகஸ்ட் 17 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது, இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட 24 முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. மேலும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சில ஆழமான கனிமங்கள் உள்பட அடையாளம் காணப்பட்ட முக்கியமான கனிமங்களுக்கு பிரத்தியேகமாக ஆய்வு உரிமம் வழங்கும் புதிய கனிம சலுகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சுரங்க அமைச்சகத்தின் முயற்சியாகும், இது இளைய சுரங்க நிறுவனங்களை ஆய்வுக்காக இந்தியாவுக்கு ஈர்க்கும் முயற்சியாகும். முக்கியமான மற்றும் அடிப்படைக் கனிமங்களை ஆராய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாட்டில் ஆய்வு நடவடிக்கைகள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. ஆய்வுக்கான அங்கீகரிக்கப்பட்ட செலவில் 25% வரை நிதி ஊக்கத்தொகை முக்கியமான மற்றும் அடிப்படைக் கனிமங்களுக்கு வழங்கப்படுகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply