நவம்பர் 2023 இல் கேப்டிவ் எனப்படும் நிறுவனங்களின் சொந்தப் பயன்பாட்டுக்கான சுரங்கங்கள் மற்றும் வணிக நிலக்கரி சுரங்கங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி உற்பத்தி 11.94 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2022 நவம்பரில் 8.74 மெட்ரிக் டன்னாக இருந்தது. அதை ஒப்பிடும்போது இது 37 சதவீத வளர்ச்சி ஆகும். அதே நேரத்தில், நவம்பர் 2023-ல் கேப்டிவ் மற்றும் வணிக நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து நிலக்கரி அனுப்புதல் 55 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 8.36 மில்லியன் டன்னாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 12.92 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் தனியார் மற்றும் வணிக நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி உற்பத்தி மற்றும் அனுப்புதல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 2023 ஏப்ரல் 1 முதல் 2023 நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் தனியார் மற்றும் வணிக நிலக்கரி சுரங்கங்களிலிருந்து மொத்த நிலக்கரி உற்பத்தி சுமார் 83.90 மில்லியன் டன் ஆகும். அதே நேரத்தில் மொத்த நிலக்கரி அனுப்புதல் 89.67 மில்லியன் டன் ஆக உள்ளது. இது 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது முறையே 24 சதவீதம் மற்றும் 31 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. முறைப்படுத்தப்படாத துறை மற்றும் வணிக நிலக்கரி சுரங்கங்களில் இருந்து முறையே 101 சதவீதம் மற்றும் 98 சதவீத வளர்ச்சியுடன் நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது.
இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கியமான அம்சமாக நிலக்கரி உற்பத்தி மற்றும் அதை பிற இடங்களுக்கு விரைந்து அனுப்புதலை மேற்கொள்ள நிலக்கரித் துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
எம்.பிரபாகரன்