மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் ஸ்ரீ பூபேந்தர் யாதவ் இன்று, இந்தியா உள்நாட்டில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், தற்போதைய மற்றும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு நிலையான உலகத்தை உருவாக்குவதற்கான உலகளாவிய அர்ப்பணிப்புகளையும் வழிநடத்துகிறது என்று கூறினார். இந்த மதிப்பு ‘வசுதைவ குடும்பகம்’ – ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் பொதிந்துள்ளது, இது இந்தியாவின் நடவடிக்கைகளை காலநிலையை நோக்கி செலுத்துகிறது. இளைஞர்கள் தலைமையிலான காலநிலை நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகளைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட பசுமை எழுச்சியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் COP28 இல் ‘பசுமை எழுச்சி: இளைஞர்களின் நடவடிக்கை மற்றும் காலநிலைக்கான தீர்வுகள்’ என்ற தலைப்பில் பேசிய அமைச்சர், நிலையான உலகத்தை அடைவதற்கு இளைஞர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்று கூறினார். பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் இளைஞர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார். காலநிலை நெருக்கடிக்கு அவர்கள் மிகக் குறைந்த பொறுப்பை ஏற்கும் அதே வேளையில், அதன் மோசமான விளைவுகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள், என்றார்.
எவ்வாறாயினும், காலநிலை நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் மதிப்புமிக்க பங்களிப்பாளர்கள் என்பதை மறுக்க முடியாது என்றும் அமைச்சர் மேலும் கூறினார் . அவர்கள் தொழில்முனைவோர், புதுமைப்பித்தன்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள நபர்கள் என மாற்றத்தின் முகவர்களாக உள்ளனர்.
திவாஹர்