தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. போக்குவரத்து சாலைகள் அனைத்து துண்டிக்கப்பட்டு யாரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
திருச்செந்தூரில் இருந்து சென்னை வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் நேற்று முன்தினம் திருச்நெந்தூரில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் புறபட்டுவிட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் இரயில் லோகோ பைலட்டால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியதால் தண்டவாளத்தை பார்க்க முடியாததால் இரயிலை ஸ்ரீவைகுண்டம் ரயில்வே நிலையத்தில் நிறுத்தியுள்ளார். சமயோஜிதமாக சரியான நேரத்தில் இரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிற்கப்பட்டுள்ளது. லோகோ பைலட்டின் பணி மிகவும் பாராட்டுக்குரியது.
செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் 800-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அவர்களின் 300 பேர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 500 பேர்கள் ரயில்வே நிலையத்திலேயே உள்ளனர். அவர்கள் மீட்பதற்குள் வெள்ளம் அதிகமானதால் மீட்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள சிறுவர்கள், முதியோர் உள்பட இரயில் பயணிகள் உண்ண உணவும், தண்ணீரும், குழந்தைகள் பால் இல்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள். தமிழக அரசும், தென்னக இரயில்வே நிர்வாகமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இரயில் பயணிகள் மிகுந்த பயத்திலும், மனஉளச்சலிலும் தவித்து வருகின்றனர். அவர்கள் ஊர் திரும்ப பணம் தேவையான அளவு இருக்குமாக என்று தெரியவில்லை. போக்குவரத்து சாலைகளில் வெள்ளம் வடிந்தவுடன், பயணிகளை மீட்டு சிறப்பு பேருந்திலோ அல்லது சிறப்பு இரயிலிலோ பயணிகளை அவரவர் ஊர்களுக்கு செல்ல தமிழக அரசும், தென்னக இரயில்வே நிர்வாகமும் இலவசமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்