வரிப்பகிர்வின் கூடுதல் தவணையாக மாநிலங்களுக்கு ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு விடுவித்தது .

வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்த ரூ .72,961.21 கோடி மதிப்புள்ள கூடுதல் தவணை வரிப் பகிர்வை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தவணை 2024, ஜனவரி 10  அன்று மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய வரிப் பகிர்வு தவணையாகும். 2023, டிசம்பர் 11  அன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்ட ரூ .72,961.21 கோடியை விட இது கூடுதலாகும். தமிழ்நாட்டுக்கு ரூ. 2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply