இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) ஹைதராபாத்தில் உள்ள ஜிஎஸ்ஐ பயிற்சி நிறுவனத்தில் 2023 டிசம்பர் 22 அன்று “கனிம ஆய்வில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கை நடத்தியது. சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ வி.எல்.காந்த ராவ் இந்த பட்டறையைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ ராவ், நமது நாட்டில் கனிம ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் புதிய யுக தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) ஆகியவற்றின் தேவையை வலியுறுத்தினார். புவி அறிவியல் தரவைச் செயலாக்குவதற்கான வழக்கமான வழிகள் நேரத்தை எடுத்துக்கொள்ளும், விலை உயர்ந்தவை மற்றும் சில நேரங்களில் அவற்றின் துல்லியத்தில் மட்டுப்படுத்தப்பட்டவை என்று அவர் கூறினார். AI மற்றும் ML போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வருகையுடன், புவியியல் தரவு படிப்படியாக அளவு, மதிப்பு, பன்முகத்தன்மை மற்றும் நேரத்தை உள்ளடக்கிய பெரிய தரவுகளின் கூறுகளால் வகைப்படுத்தப்படுகிறது. பெரிய தரவு தொழில்நுட்பங்களின் அரங்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) முறைகள், உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங்கின் வளர்ச்சியுடன் நல்ல வருங்கால கனிம மாதிரிகளை கண்டுபிடிப்பதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் அரசை வலியுறுத்தினார்.
திவாஹர்