புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தேசிய நுகர்வோர் உதவி எண் 2.0 நுகர்வோர் குறைகளை சிறந்த முறையில் தீர்க்கும்: தேசிய நுகர்வோர் தினத்தில் பியூஷ் கோயல் உறுதி.

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குறை தீர்க்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் நுகர்வோர் விவகாரத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம் 2023 புதுதில்லியில் இன்று கொண்டாடப்பட்டது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தனது தொடக்க உரையில், வாடிக்கையாளரின் திருப்தி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று எடுத்துரைத்தார்.

நுகர்வோர் உரிமைகள் பற்றிய விவாதங்களில் நுகர்வோர் கவனிப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், பி20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் வெளிப்படுத்திய நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய அவர், நாட்டின் முன்னேற்றம் நுகர்வோர் திருப்தியை உறுதி செய்வதில் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இ-ஜாக்ரிதி இணையதளம், தேசிய நுகர்வோர் தகராறுகளை நிவர்த்தி செய்யும் ஆணையத்தின் காணொலிக் காட்சி வசதி, தேசிய சோதனை இல்லத்தின் ட்ரோன் சோதனை, 17 மொழிகளில் தேசிய நுகர்வோர் உதவி எண் 2.0 மற்றும் அழைப்புகளில் 13 மடங்கு அதிகரிப்பு ஆகியவை நுகர்வோர் நம்பிக்கையை உருவாக்குவதற்கான அரசின் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். புதிய தரக்கட்டுப்பாட்டு ஆணைகள்  சந்தையில் பொருட்களின் தரத்தை சாதகமாக வெளிப்படுத்துகின்றன.

பரவலான தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதோடு, இந்த தொழில்நுட்ப விரிவாக்கத்துடன் தொடர்புடைய அபாயங்களும் அதிகரித்து வருகிறது என்று நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு போன்ற விஷயங்கள், நெறிமுறையற்ற வடிவங்களைத் தணிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நடந்து வரும் உரையாடல், ஒரு விரிவான பங்கெடுப்பாளர்களின் விவாதத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. நுகர்வோர் விவகாரத்துறையால் “நெறிமுறையற்ற வடிவங்களைத் தடுப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் வழிகாட்டுதல்கள், 2023” சமீபத்தில் வெளியிடப்பட்டதை அமைச்சர் பாராட்டினார். இந்த வழிகாட்டுதல்கள், 13 குறிப்பிட்ட நெறிமுறையற்ற வடிவங்களை சுட்டிக்காட்டுகின்றன,

கையாளுதல் நடைமுறைகளைத் தடுக்கவும் ஒழுங்குபடுத்தவும், நுகர்வோருக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான சந்தையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

தேசிய ஆணையத்தின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி திரு. அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி அவர்களின் முயற்சிகளை திரு கோயல் பாராட்டினார். நுகர்வோர் விவகாரங்கள் துறை நுகர்வோர் ஆணையங்களுடன் இணைந்து வியூகம் வகுக்க வேண்டும் என்றும், பழைய நிலுவையில் உள்ள வழக்குகளை முற்றிலுமாக அகற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த  வேண்டும் என்றும், புதிய வழக்குகளை விரைவாகவும் நிகழ்நேரத்திலும் தீர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பான பிரச்னைகள் குறித்து பேசிய திரு. கோயல், நுகர்வோர் விவகாரத் துறையுடன் இணைந்து செயலூக்கமான நடவடிக்கைகள் மற்றும் பண மற்றும் நிதிக் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம், உணவுப் பணவீக்கத்தை வெற்றிகரமாக கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது என்று குறிப்பிட்டார்.

திவாஹர்

Leave a Reply