இந்தியாவின் முதல் பல அலைநீள விண்வெளி அடிப்படையிலான ஆய்வகமான ஆஸ்ட்ரோசாட், புதிய மற்றும் தனித்துவமான நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து புதிய உயர் காந்தப்புலம் கொண்ட பிரகாசமான விநாடிக்கும் மிகக் குறைவான எக்ஸ்ரே வெடிப்புகளைக் கண்டறிந்துள்ளது, இது காந்தங்களின் புதிரான தீவிர வானியற்பியல் நிலைமைகளைப் புரிந்துகொள்ள உதவும்.
காந்தப் புலத்தை விட மிகவும் வலிமையான அதி உயர் காந்தப்புலத்தைக் கொண்டவை நியூட்ரான் விண்மீன் காந்தங்கள் ஆகும். எளிமையாகச் சொல்வதானால், ஒரு காந்தத்தின் காந்தப்புலம், பூமியின் காந்தப்புலத்தை விட ஆயிரம் ட்ரில்லியன் மடங்கிற்கு மேல் வலுவானது. இவற்றில் உயர் ஆற்றல் கொண்ட மின்சக்தி மற்றும் காந்தக் கதிர்வீச்சின் உமிழ்வுக்கு சக்தி அளிப்பது, இந்தப் பொருட்களில் உள்ள காந்தப் புலங்களின் சிதைவு ஆகும். மேலும், பொதுவாக, மெதுவான சுழற்சி, விரைவான கீழ் நோக்கிய சுழல், பிரகாசமான ஆனால் குறுகிய வெடிப்புகள், பல மாதங்கள் நீடிக்கும் வெடிப்புகள் ஆகியவை அடங்கிய வலுவான தற்காலிக மாறுபாட்டை காந்தங்கள் வெளிப்படுத்துகின்றன.
எஸ்.ஜி.ஆர் ஜே 1830-0645 என்று அழைக்கப்படும் அத்தகைய ஒரு காந்தம் 2020 அக்டோபரில் நாசாவின் ஸ்விஃப்ட் விண்கலத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒப்பீட்டளவில் இளமையானது (சுமார் 24,000 ஆண்டுகள்) மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நியூட்ரான் விண்மீன் ஆகும்.
ஆஸ்ட்ரோசாட் மூலம் காந்தத்தை ஆய்வு செய்வதற்கும் அதன் பண்புகளை ஆராய்வதற்கும் உந்தப்பட்ட ராமன் ஆராய்ச்சி நிறுவனம் (ஆர்.ஆர்.ஐ) மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், இந்த காந்தத்தின் நேரம் மற்றும் நிறமாலை பகுப்பாய்வை ஆஸ்ட்ரோசாட் — பெரிய பகுதி எக்ஸ் ரே விகிதாச்சார கவுண்டர் (எல்.ஏ.எக்ஸ்.பி.சி) மற்றும் மென்மையான எக்ஸ் ரே தொலைநோக்கி (எஸ்.எக்ஸ்.டி) ஆகியவற்றில் உள்ள இரண்டு கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.
“முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, சராசரியாக 33 மில்லி விநாடிகள் கொண்ட 67 குறுகிய துணை-விநாடி எக்ஸ் ரே வெடிப்புகளின் பகுப்பாய்வு ஆகும். இந்த வெடிப்புகளில், பிரகாசமான ஒன்று, சுமார் 90 மில்லி விநாடிகள் நீடித்தது”, என்று ஆய்வறிக்கையின் முன்னணி ஆய்வாளரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்ட ஆர்.ஆர்.ஐ.யின் முதுகலை ஆராய்ச்சியாளருமான டாக்டர் ராகுல் சர்மா கூறினார்.
ராயல் வானியல் கழகத்தின் மாதாந்திர அறிவிப்புகளில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, எஸ்ஜிஆர் ஜே 1830–0645 என்பது, அதன் நிறமாலையில் உமிழ்வுக் கோட்டைக் காட்டும் ஒரு தனித்துவமான காந்தவியல் என்றுமுடிவு செய்தது.
எம்.பிரபாகரன்