மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கலிங்கப்பட்டினத்திற்கு சென்று இறால் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
தரமான இறால்களை உற்பத்தி செய்ய பயோ-ஃப்ளோக் 4 அடுக்கு தொழில்நுட்பம் பின்பற்றப்படுவது குறித்து அவர் விளக்கினார். இந்தக் கண்டுபிடிப்பு மேம்பட்ட வளர்ப்பு முறை கொண்டதாகும்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் இந்தியாவில் இறால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றாகும். மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இங்கு இறாலின் தரத்தைப் பராமரிக்க முடிகிறது. பிற நாடுகளுக்கு இறால் ஏற்றுமதியில் இந்த மாவட்டம் பெரும் பங்கு வகிக்கிறது.
கலிங்கப்பட்டினத்தின் தற்போதைய இறால் வளர்ப்பு பகுதி 1000 ஏக்கருக்கும் அதிகமாக உள்ளது. இங்கிருந்து ஆண்டுக்கு சுமார் 40,000 டன் இறால் உற்பத்தி செய்யப்பட்டு, சுமார் ரூ. 10,000 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. சுமார் 600 விவசாயிகள் மற்றும் சுமார் 5000 பேர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்தப் பண்ணைகளில் வேலை செய்கிறார்கள்.
திவாஹர்