ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை 50 ஓய்வூதியர் நலச் சங்கங்கள் மற்றும் 16 வங்கிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கம் 2.0 ஐ ஆய்வு செய்தது .

மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை நாடு முழுவதும் கடந்த மாதம் 1 முதல் 30 வரை 105 நகரங்களில் உள்ள 602 இடங்களில் 16 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், அனைத்து அமைச்சகங்கள் / துறைகள், 50 ஓய்வூதியர் நலச் சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கத்தை நடத்தியது.

இது தொடர்பாக, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின் செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ், 26.12.23 அன்று 16 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் மற்றும் 50 ஓய்வூதியர் நலச் சங்கங்களைச் சேர்ந்த 290 ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கம் 2.0 இன் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.

ஓய்வூதியதாரர்களை அணுகி, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை, குறிப்பாக முக அங்கீகார நுட்பத்தின் மூலம் சமர்ப்பிக்க உதவுவதில், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் மற்றும் ஓய்வூதியர்கள் நலச் சங்கங்கள் ஆற்றிய மகத்தான சேவைகளை, செயலாளர் பாராட்டினார். வங்கி அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர் நலச்சங்கங்கள், படுக்கையில் உள்ள/ உடல் நலம் குன்றிய ஓய்வூதியதாரர்களின் வீடுகள்/ மருத்துவமனைகளுக்குச் சென்று அவர்களின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை உருவாக்கியுள்ளன, இது இந்த ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

டி.எல்.சி இயக்கம் 2.0 -ன் கீழ், 1.29 கோடி ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர், அவர்களில் 41 லட்சத்துக்கும் அதிகமானோர் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் ஆவர். இந்த இயக்கத்தின் விளைவாக, முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் டி.எல்.சி.களின் எண்ணிக்கை 21.34 லட்சத்திற்கும் அதிகமாகவும், பயோ-மெட்ரிக்கைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 97.13 லட்சமாகவும், கருவிழியைப் பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 10.95 லட்சமாகவும் உள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களில், 10.43 லட்சம் பேர் முக அங்கீகாரம் மூலமும், 28.90 லட்சம் பேர் பயோ மெட்ரிக் மூலமும், 2.33 லட்சம் பேர் கருவிழி மூலமும் டிஎல்சிக்களை வழங்கியுள்ளனர். டி.எல்.சி.க்களின் வயது வாரியான தலைமுறையை பகுப்பாய்வு செய்ததில், 90 வயதுக்கு மேற்பட்ட 27,000 க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், 80 முதல் 90 வயதுக்குட்பட்ட 2.84 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் டிஜிட்டல் பயன்பாட்டைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இத்துறையால் உருவாக்கப்பட்ட பிரத்யேக டி.எல்.சி போர்ட்டலின்படி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகியவை முறையே 5.48 லட்சம், 5.03 லட்சம், 2.81 லட்சம், 2.78 லட்சம் மற்றும் 2.44 லட்சம் டி.எல்.சி.களை உருவாக்கியுள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை முறையே 8.22 லட்சம், 2.59 லட்சம், 0.92 லட்சம், 0.74 லட்சம் மற்றும் 0.69 லட்சம் டி.எல்.சி.களுடன் முன்னணி ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளாகும்.

இதுவரை தங்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்களின் பட்டியல் அனைத்து பொது நல அலுவலர்களுக்கும் வங்கிகளால் வழங்கப்படும், இதன் மூலம் சங்கங்கள் 50 லட்சம் டி.எல்.சி.க்கள் என்ற இலக்கை அடைய 100% செறிவூட்டல் அணுகுமுறையைப் பின்பற்ற உதவும் என்று செயலாளர் தெரிவித்தார்.

ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் அனைத்து சிறப்பு அதிகாரிகளுடன் நடத்தப்படும் முகாம்களின் வெற்றிக் கதைகள் மற்றும் மேம்பாடுகளின் பகுதிகளை அடையாளம் காண விரிவான மறுஆய்வை மேற்கொள்ளும். 2023 ஆம் ஆண்டில் நாடு தழுவிய டி.எல்.சி பிரச்சாரம் 2.0 ஐ வெற்றிகரமாக செயல்படுத்துவது, 2024 நவம்பரில் மிகவும் லட்சியமான நாடு தழுவிய டி.எல்.சி பிரச்சாரம் 3.0-க்கான எதிர்பார்ப்புகளை எழுப்புகிறது என்றும் செயலாளர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply