ஆயுஷ் அமைச்சகம் தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை செயல்படுத்துவதில் 2023-ம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆண்டு இந்திய பாரம்பரிய மருத்துவ கலாச்சாரம் உலக அளவில் அதிகம் பரவியுள்ளது.
2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்:
- ஆயுஷ் அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டின் முதல் சிந்தனை முகாம் பிப்ரவரி மாதம் அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயுஷ் மருத்துவ முறையில் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம், எதிர்கால முன்முயற்சிகள், சவால்கள், ஆயுஷ் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஆயுஷ் மருந்து தொழில்கள், ஆயுஷ் தயாரிப்புகளைத் தரப்படுத்தல், பொது சுகாதாரத்தில் ஆயுஷ், போன்றவை குறித்த அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
- பாரம்பரிய மருந்துகள் தொடர்பான அம்சம் புதுதில்லி ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டு பிரகடனத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
- நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில், இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் இதில் நிகழ்த்தப்பட்டன.
- 9வது சர்வதேச யோகா தினத்தின் சிறப்பம்சமாக ஓஷன் ரிங் ஆஃப் யோகா என்ற தனித்துவமான அம்சம் நடத்தப்பட்டது. இதில் 19 இந்திய கடற்படை கப்பல்களில் சுமார் 3500 கடற்படை வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச கடல்களில் யோகா தூதர்களாக 35,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தனர்.
- ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான யோகா இந்த ஆண்டு யோகா தினத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
- குஜராத் பிரகடனம்: பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலகளாவிய உச்சி மாநாடு (17-18 ஆகஸ்ட் 2023) உலக சுகாதார அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை நோக்கி செயல்படுவதற்கான உலக சுகாதார அமைப்பின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி குஜராத் பிரகடனம் வெளியிடப்பட்டது.
ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் போது “பாரம்பரிய மருத்துவம் குறித்த ஜி 20 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு” நடைபெற்றது, இதன் மூலம் ஜி 20 நாடுகள் தங்கள் நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தின் செயல்பாடுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பேசின.
பிரதமர் திரு நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் ‘ஆயுஷ் துறைகள்’ பற்றி குறிப்பிட்டது அதன் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை அளித்தது.
திவாஹர்