மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, யூனியன் பிரதேசமான லடாக்கில் 29 சாலைத் திட்டங்களுக்கு ரூ.1170.16 கோடி ஒதுக்கீடு செய்து அத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 2023-24-ம் நிதியாண்டில் மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதிய திட்டத்தின் கீழ் 8 பாலங்களுக்கு கூடுதலாக ரூ.181.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பரப்பளவில் பெரிய யூனியன் பிரதேசமாகவும், குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகவும் உள்ள லடாக்கில், மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சிகள் தொலைதூரக் கிராமங்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்தச் சாலை மேம்பாட்டு நடவடிக்கைகள் அப்பகுதியில் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும், குறிப்பாக விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் மேம்பாட்டுக்கு பங்களிக்கும் எனவும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
எம்.பிராபகரன்