காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் இன்று பார்வையிட்டார். கலாசார நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பார்வையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். வாரணாசி நமோ காட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் பார்வையிட்டார். தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றத்தின் தலைவர் NBA NAAC, பேராசிரியர் அனில் சஹஸ்ரபுதே மற்றும் பிற முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சர்க்கார், காசி மற்றும் தமிழகத்தின் பாரம்பரியம், கலை, நடனம், இசை, இலக்கியம் மற்றும் கைவினைகளின் சங்கமத்தில் இருப்பது ஒரு பாக்கியம் என்றார். காசி தமிழ் சங்கம் ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரதத்தின் உணர்வை மேம்படுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதை அவர் எடுத்துரைத்தார். காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்து மீண்டும் கண்டறிவது அறிவுசார் மற்றும் நடைமுறைத் துறைகளில் முக்கியமான அறிவாற்றலை உருவாக்க வழிவகுக்கும் என்றும் டாக்டர் சர்க்கார் கூறினார்.
கடந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமத்தின் முதல் கட்டம் நவம்பர் 16 முதல் டிசம்பர் 16, 2022 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு, 2023 டிசம்பர் 17-30 தேதிகளில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 1400க்கும் மேற்பட்ட (சராசரியாக 200 பேர் கொண்ட 7 குழுக்கள்) மக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி பயணித்துள்ளார். அவர்கள் காசியில் தங்கியிருந்த காலத்தில், அவர்களது சுற்றுப்பயணப் பயணத்தின்படி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் சென்று வந்தனர்.
எம்.பிரபாகரன்