தமிழக அரசு, அரசுப்போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தது நியாயமில்லை. தமிழக அரசு, உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்!-ஜி.கே‌.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்திருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இப்பேச்சுவார்த்தையில் அரசுத்தரப்பில் தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை ஏற்க முன்வரவில்லை தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.இது தமிழக அரசின் தொழிலாளர் நலன் விரோதப்போக்கை எடுத்துக்காட்டுகிறது.

இந்த முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால் தொழிற்சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்தபடி நாளை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றால் பொங்கல் பண்டிகைக்கு அவரவர் ஊருக்கு செல்வதில் போக்குவரத்தில், அரசுப்பேருந்துகள் சரிவர கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.மேலும் அரசுப்பேருந்தில் செல்ல இருக்கும் பொது மக்கள் மாற்று ஏற்பாடாக அதிக செலவு செய்து பயணம் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

குறிப்பாக தமிழக அரசு பொருளாதாரம் என ஏதாவது காரணம் கூறி சுயநலனுக்காக பொது மக்களின் பொது நலன் பாதிக்கும் வகையில் செயல்படுவது நியாயமில்லை.எனவே தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து, போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply