ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறையின் புள்ளிவிவர மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல் தொழில்நுட்பக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்தை டாக்டர் அபிஜித் மித்ரா தொடங்கி வைத்தார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறையின் புள்ளிவிவரங்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல் தொழில்நுட்பக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்தைக் கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா இன்று தொடங்கி வைத்தார்.

அத்தியாவசியத் தரவு இடைவெளிகளைக் கண்டறிந்து, தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல், மத்திய, மாநில/ யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டிய புள்ளிவிவர முறை குறித்து ஆலோசித்துப் பரிந்துரைத்தல், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் தொடர்பான மாதிரி கணக்கெடுப்பு நடத்துவதில் வழிகாட்டுதல் வழங்குதல், பரிந்துரைகளை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுதல் ஆகியவை இக்குழுவின் நோக்கமாகும்.

கால்நடை உற்பத்தி, பாதுகாப்பு, நோய்களிலிருந்து பாதுகாப்பு, பால்வள மேம்பாடு தொடர்பான நடவடிக்கைளுக்கும், தில்லி பால் திட்டம், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தொடர்பான விஷயங்களுக்கும் கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை பொறுப்பாகும். கால்நடைப் பராமரிப்பு, பால்பண்ணை மேம்பாட்டுத் துறையின் கொள்கைகள், திட்டங்களை வகுப்பதில் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களுக்கு இத்துறை ஆலோசனை வழங்குகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply