மேற்கு வங்க மாநிலம் கக்தீவுக்கு அப்பால் தரைதட்டிய படகு ஒன்றில் சிக்கிய 182 யாத்ரீகர்களை இந்தியக் கடலோரக் காவல்படை 2024, ஜனவரி 16 அன்று மீட்டது. சாகர் தீவில் நடைபெற்ற கங்கா சாகர் விழாவுக்குப் பின் கக் தீவுக்கு சுமார் 400 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ‘ஸ்வஸ்தியா சத்தி’ என்ற வணிகக் கப்பல் மிகவும் மோசமான வானிலை காரணமாகத் தரைதட்டியது.
இதையடுத்து, அதிகாலையில் தெற்கு 24 பர்கானா மாவட்ட ஆட்சியரிடமிருந்து கிடைத்த தகவலுக்குப் பிறகு, இந்தியக் கடலோரக் காவல் படையின் செயல்பாட்டுக் குழு உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. உதவிகளை வழங்குவதற்காக ஹால்டியா, சாகர் தீவிலிருந்து தரையிலும் தண்ணீரிலும் இயங்கும் ஏர் குஷன் வாகனங்களைக் கொண்ட இரண்டு ஹோவர்கிராஃப்ட்ஸ் வாகனங்கள் அனுப்பப்பட்டன. இந்த வாகனங்கள் மூலம் 182 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர். மீதமுள்ள யாத்ரீகர்களுடன் அந்தப் படகு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டது.
எம்.பிரபாகரன்