‘பாரத் கெளரவ்’ சுற்றுலா ரயில்கள் என்ற பெயரில் சுற்றுலா ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது. இந்தச் சுற்றுலா ரயில்கள் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், அற்புதமான வரலாற்று இடங்களை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 2023-ம் ஆண்டில், 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 96,491 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. இதற்காக 172 பயணங்கள் நடைபெற்றன. இந்த ரயில்கள் திரு ராம் – ஜானகி யாத்திரை: அயோத்தி முதல் ஜனக்பூர் வரை. ஸ்ரீ ஜகந்நாதர் யாத்திரை; “கார்வி குஜராத்” சுற்றுப்பயணம்; அம்பேத்கர் வளாகம், வடகிழக்குப் பகுதிகள் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயண ரயில்கள் இயக்கப்பட்டன. .
இதில் சுற்றுலா, விடுதிகளில் தங்குதல், சுற்றுலா வழிகாட்டிகள், உணவு, பயணக் காப்பீடு போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.
திவாஹர்