துராவின் பால்ஜெக் விமான நிலையத்தில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடினார்; துராவில் புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

மேகாலயாவின் துராவில் உள்ள பால்ஜெக் விமான நிலையத்தில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுடன் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 16, 2024) கலந்துரையாடினார் . துராவில் புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீகத் துறைகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் இன்றியமையாதது என குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, கல்வி, தொழில்முனைவு, விவசாயம் அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியப் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து மற்ற பெண்களுக்கு வழிகாட்டுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ளும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற எண்ணத்தை அமல்படுத்த முடியும் என குடியரசுத்தலைவர் கூறினார். பொருளாதார சுதந்திரத்துடன், இது ஓரளவிற்கு உண்மையாகி விட்டது. பொருளாதாரத் தற்சார்பு பெண்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறது என அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply