துராவின் பால்ஜெக் விமான நிலையத்தில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடினார்; துராவில் புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக, சட்டம் இயற்றும் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கட்சி சார்பின்றி ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய பொறுப்பு உள்ளதாகக் குடிரயசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே இன்று ஜெய்ப்பூரில் உரையாற்றிய அவர், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், அடித்தளமாக சட்டம் இயற்றும் அமைப்பு திகழ்வதாகக் கூறினார். நிர்வாகத்துறை, நீதித்துறை உட்பட அரசின் அனைத்து அமைப்புகளுக்கும் இடையே சமநிலையை உறுதி செய்வதில் சட்டம் இயற்றும் அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இடையூறு ஏற்படுத்துதல், குழப்பத்தை விளைவித்தல் போன்ற நடவடிக்கைகள் பற்றி அவர் எச்சரித்தார். இத்தகைய உத்திகள் ‘குறைந்த ஆயுட்காலம்’ கொண்டவை என்றும், இவை பொறுப்புகளை நிறைவேற்றும் அரசின் வாய்ப்புகளை இழக்க வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பிரச்சனைகளை அவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாததால், அவ்வப்போது மக்கள் சில குறைகளுடன் தெருக்களில் போராட்டத்தில் ஈடுபடுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகள் அவையின் ‘முதுகெலும்பு’ என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், உறுப்பினர்கள் மாறுபட்ட கண்ணோட்டங்களை மோதலாகக் கருதுவதற்கு மாறாக, பொது நலனுக்கானவை என்று உணருமாறு கேட்டுக் கொண்டார். நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமே தவிர, அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply