அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டாவின் பின்னணியில், சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலி செய்திகள் பரவுவதை கவனத்தில் கொண்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

2024 ஜனவரி 22, அன்று அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டா விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ள சூழலில், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சில சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலிச்செய்திகள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன, அவை வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கக்கூடும் என்று கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, 2024 ஜனவரி 20 ஆம் தேதி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கு அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது, தவறான அல்லது போலியான அல்லது நாட்டில் வகுப்புவாத நல்லிணக்கம் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தன்மை கொண்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் வெளியிடுவதையோ அல்லது ஒளிபரப்புவதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறது. மேலும், சமூக ஊடக தளங்கள் தங்கள் உரிய விடாமுயற்சியின் ஒரு பகுதியாக, மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை பதிவேற்றம் செய்யவோ, காட்சிப்படுத்தவோ அல்லது வெளியிடவோ கூடாது என்று நியாயமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் ஒழுங்குமுறை சட்டம், 1995 இன் கீழ் நிகழ்ச்சி குறியீட்டின் பின்வரும் விதிகள் மற்றும் பிரஸ் கவுன்சில் சட்டம், 1978 இன் கீழ் இந்திய பத்திரிகை கவுன்சில் வகுத்துள்ள பத்திரிகை நடத்தை விதிமுறைகள் குறித்த  இந்த ஆலோசனை கவனத்தை ஈர்க்க விழைகிறது. இது தகவல் தொழில்நுட்ப (இடைப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை குறியீடு) 2021விதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதழியல் நடத்தை விதிமுறைகள்

“துல்லியம் மற்றும் நேர்மை: i) துல்லியமற்ற, ஆதாரமற்ற, கருணையற்ற, தவறாக வழிநடத்தும் அல்லது சிதைந்த உள்ளடக்கத்தை வெளியிடுவதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும்.

சாதி, மதம் அல்லது சமூகம் குறிப்புகள்: 6) ஒரு கட்டுரையின் தொனி, உணர்வு மற்றும் மொழி ஆட்சேபனைக்குரியதாகவோ, ஆத்திரமூட்டுவதாகவோ, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகவோ அரசியலமைப்பின் உணர்வுக்கு எதிரானதாகவோ தேசத்துரோகம் மற்றும் ஆத்திரமூட்டும் இயல்புடையதாகவோ அல்லது வகுப்புவாத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகவோ இல்லை என்பதை உறுதிப்படுத்துவது செய்தி நிறுவனங்களின் கடமையாகும்.

முதன்மையான தேசிய நலன்: i) இந்திய அரசியலமைப்பின் 19 வது பிரிவின் பிரிவு (2) இன் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை மீது சட்டத்தால் நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடிய அரசு மற்றும் சமூகத்தின் தலையாய நலன்களுக்கு அல்லது தனிநபர்களின் உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும், தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவொரு செய்தி, கருத்து அல்லது தகவலையும் வழங்குவதில் செய்தித்தாள்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் உரிய கட்டுப்பாட்டையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

நிகழ்ச்சி குறியீடு

“விதி 6 (1) கேபிள் சேவையில் எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்படக்கூடாது:-

(இ) மதங்கள் அல்லது சமூகங்கள் மீதான தாக்குதல்கள் அல்லது மதக் குழுக்களை இழிவுபடுத்தும் அல்லது வகுப்புவாத மனப்பான்மையை ஊக்குவிக்கும் காட்சிகள் அல்லது சொற்கள்;

(ஈ) ஆபாசமான, அவதூறான, வேண்டுமென்றே, தவறான மற்றும் பரிந்துரைக்கும் சூழ்ச்சிகள் மற்றும் அரை உண்மைகளைக் கொண்டுள்ள தகவல்கள்;

(உ) வன்முறையை ஊக்குவித்தல் அல்லது தூண்டுதல் அல்லது சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கு எதிரான அல்லது தேச விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் எதையும் உள்ளடக்கியதாக இருத்தல்;

சமூக ஊடக தளங்கள் உட்பட தொலைக்காட்சி, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகளை பின்பற்றுமாறு அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது, குறிப்பாக பொது ஒழுங்கு தொடர்பான விஷயங்களில், வெளியிடப்படும் / ஒளிபரப்பப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையில் துல்லியம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மத சமூகங்களிடையே வகுப்புவாத நல்லிணக்கத்தையும் பேனவேண்டும்

திவாஹர்

Leave a Reply