இந்திய அரசின் உயர்மட்ட தன்னாட்சி நிறுவனமான நல்லாட்சிக்கான தேசிய மையம் (என்.சி.ஜி.ஜி) கம்போடியாவின் 38 அரசு ஊழியர்களுக்கான பொதுக் கொள்கை மற்றும் ஆளுமை குறித்த மூன்றாவது திறன் மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இரண்டு வார நிகழ்ச்சி ஜனவரி 8, 2024 முதல் ஜனவரி 19, 2024 வரை ஏற்பாடு செய்யப்பட்டது.
என்.சி.ஜி.ஜியின் முயற்சிகள் பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அண்டை நாடுகள் முதலில்’ கொள்கையுடன் ஒத்துப்போகின்றன, இது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், அண்டை நாடுகளுடன் பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பதையும் வலியுறுத்துகிறது. நிறைவு விழாவில் இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளரும், நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குனருமான திரு. வி. ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கும் கம்போடியா மக்களுக்கும் இடையே பொது நிர்வாகம் மற்றும் ஆளுமையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றார். அடுத்த 5 ஆண்டுகளில் கம்போடியாவில் டிஜிட்டல் மாற்றத்தில் இந்தியாவின் அனுபவம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அனுபவம் பிரதிபலிப்பது குறித்து அவர் விளக்கினார்.
குழு விவாதங்கள் மற்றும் விவாதங்கள் மூலம் வலுவான பிணைப்பை செயல்படுத்துவதில் ‘சிந்தனை முகாமின்’ முக்கியத்துவத்தை திரு வி. ஸ்ரீனிவாஸ் எடுத்துரைத்தார். டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெற்ற குடிமக்கள் மற்றும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட நிறுவனங்களால் வெளிப்படும் “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை” என்ற கொள்கை பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டினார்.
எம்.பிரபாகரன்