ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா பூஜையில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பு.

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராம் லல்லாவை கும்பாபிஷேகம் செய்வதற்கான தீர்மானம் நிறைவடைந்ததன் மூலம், 5 நூற்றாண்டுகளின் காத்திருப்பு மற்றும் வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கருவறைக்கு பிரதமர் நரேந்திர மோதி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.

வண்ண வண்ண மலர்களாலும், கண்களைப் பறிக்கும் விலை உயர்ந்த நகைகளாலும் குழந்தை ராமர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனைத் தொடர்ந்து பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது. கோயில் அர்ச்சகர் வழிகாட்டுதலின் கீழ் பிரதமர் நரேந்திர மோதி, பல்வேறு பூஜைகளை செய்தார். குழந்தை ராமரை தரிசித்த பிரதமர் உள்ளிட்டோர் நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040. editorutlmedia@gmail.com

Leave a Reply