அயோத்தி புறவழிச்சாலை திட்டத்தின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் தூண்டுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 131 க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களின் விரிவான பகுதி அடிப்படையிலான சமூக-பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ் 64 இணைப்பு திட்டமிடல் குழு (என்.பி.ஜி) கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 52-வது என்.பி.ஜி கூட்டத்தின் போது அயோத்தி புறவழிச்சாலை திட்டம் ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு திட்டமாக மதிப்பீடு செய்யப்பட்டது.

67.57 கி.மீ லக்னோ, பஸ்தி மற்றும் கோண்டா போன்ற முக்கிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிரீன்ஃபீல்ட் திட்டமாக இத்திட்டம்  அமையும். இந்தத் திட்டம், இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள சுற்றுலா மற்றும் புனிதத் தலங்கள் உள்ளிட்ட பொருளாதார, சமூக மற்றும் சரக்கு போக்குவரத்து முனையங்களுக்கான இணைப்பை மேம்படுத்த உதவும்.

அயோத்தி இரண்டு பொருளாதார மையங்களுக்கு (லக்னோ மற்றும் கோரக்பூர்) இடையில் அமைந்துள்ளது மற்றும் தோல், பொறியியல் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு போன்ற முக்கிய பொருட்கள் நகரத்தின் வழியாக செல்கின்றன, எனவே இந்த புறவழிச்சாலையின்  கட்டுமானம் தடையற்ற சரக்கு போக்குவரத்திற்கு வழிவகுக்கும் மற்றும் நகரத்தின் நெரிசலைக் குறைக்கும். ரயில் நிலையங்கள் (அயோத்தி ரயில் நிலையம், சோஹ்வால் ரயில் நிலையம், ஏ.என்.தேவ் நகர் ரயில் நிலையம் மற்றும் அயோத்தி கண்டோன்மென்ட் ரயில் நிலையம்) மற்றும் விமான நிலையம் (அயோத்தி விமான நிலையம்) போன்ற ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புடன் பன்முக வசதிகளை இந்தத் திட்டம் மேம்படுத்தும்.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply