75வது குடியரசு தின அணிவகுப்பு 26 ஜனவரி 2024 அன்று தில்லியின் கடமைப் பாதையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த ஆண்டு, இந்திய அரசு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15,000 க்கும் மேற்பட்டவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்திருந்தனர், இது நாட்டின் முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. மத்திய அரசின் திட்டங்களான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டம் ஆகியவற்றின் பயனாளிகளான 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த அணிவகுப்பைக் காண மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு 2024 ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 2 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒரு வளமான அனுபவத்திற்காக, வேளாண் உள்கட்டமைப்பு நிதி, ஒவ்வொரு துளியிலும் அதிக மகசூல் குறித்த விரிவான பயிற்சி அமர்வு மற்றும் பூசா வளாகத்தின் புகழ்பெற்ற வயல்களுக்கு கள ஆய்வு ஆகியவை 25 ஜனவரி 2024 அன்று விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா மற்றும் இணையமைச்சர் ஷோபா கரண்ட்லஜே ஆகியோர் கலந்து கொண்ட தொடக்க விழாவுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பயிற்சி அமர்வின் பின்னணி மற்றும் அவர்களின் பொருளாதார நல்வாழ்வு மற்றும் நலனுக்கு அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவு ஆகியவற்றை பிரமுகர்கள் எடுத்துரைத்தனர்.
திவாஹர்