அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். 

75 வது குடியரசு தின கொண்டாட்டங்களை தொடர்ந்து நடக்கும் இந்த  மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், “நமது அரசியலமைப்பின் 75 வது ஆண்டைக் குறிக்கும் வகையிலான 75 வது குடியரசு தின விழா முடிந்த அடுத்த நாளே நடைபெறும் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது” என அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.

அரசியலமைப்பு சபையிலிருந்து கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, “நமது அரசியலமைப்பு சபையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பல்வேறு எண்ணங்கள், விஷயங்கள் மற்றும் கருத்துக்களுக்கு இடையில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு இருந்தது, அவர்கள் அதற்கு ஏற்ப வாழ்ந்தனர்.”

அரசியல் நிர்ணய சபையின் இலட்சியங்களில் இருந்து மீண்டும் உத்வேகம் பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மாநாட்டில் பங்கேற்றுள்ள சபாநாயகர்களின் பங்கை எடுத்துரைத்த பிரதமர் மோடி, “உங்கள் பதவிக்காலத்தில், ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்ல முயற்சி செய்யுங்கள் அது வருங்கால சந்ததியினருக்கு ஒரு பாரம்பரியமாக அமையும்” என்று அவர் கூறினார்.

சட்டமன்ற அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “விழிப்புடன் உள்ள மக்கள் ஒவ்வொரு பிரதிநிதியையும் ஆராயும் இன்றைய சூழ்நிலையில் சட்டமன்றங்கள் மற்றும் குழுக்களின் செயல்திறனை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது” என்று கூறினார்.

சட்டமன்ற அமைப்புகளுக்குள் ஒழுக்கத்தை பராமரிப்பது குறித்து பேசிய பிரதமர் மோடி, “சபையில் உறுப்பினர்களின் நடத்தை மற்றும் அதில் உகந்த சூழல் ஆகியவை சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை நேரடியாக பாதிக்கின்றன. இந்த மாநாட்டில் இருந்து வெளிவரும் உறுதியான பரிந்துரைகள் சபையின் நடவடிக்கைகளை மேம்படுத்தும்  கருவியாக இருக்கும்.

திவாஹர்

Leave a Reply