நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜனவரி 30 அன்று ஆலோசனை .

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை (ஜனவரி 30, 2024) காலை 11:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெறும்.

நாடாளுமன்ற அமர்வு 2024, ஜனவரி 31 அன்று குடியரசுத்தலைவரின் உரையுடன் தொடங்கும். அரசு அலுவல்களின் அவசரங்களுக்கு உட்பட்டு, அமர்வு 2024, பிப்ரவரி 9 அன்று முடிவடையும். மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024 பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின்  இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

திவாஹர்

Leave a Reply