ஜம்மு காஷ்மீரில் 850 மெகாவாட் ரட்லே நீர்மின் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. 2024, ஜனவரி 27 அன்று காலை 11.30 மணிக்கு, கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள டிராப்ஷல்லாவில் சுரங்கங்கள் மூலம் செனாப் நதியை திசைதிருப்பி, நதிநீரை மடை மாற்றம் செய்வதன் மூலம் ஆற்றுப் படுகையில் உள்ள அணைப் பகுதியை தனிமைப்படுத்தி, அணை கட்டுதல் போன்ற முக்கியமான பணிகளைத் தொடங்க இயலும். இது கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவதுடன், தாமதங்களைக் குறைக்கவும் உதவும், இதன் மூலம் திட்டமிடப்பட்டபடி 2026 மே மாதம் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நிறைவடையும்.
நதி திசைதிருப்பும் நிகழ்வை தேசியப் புனல்மின் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஆர்.கே.விஷ்னோய் தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீர் அரசின் முதன்மைச் செயலாளர் திரு எச்.ராஜேஷ் பிரசாத் முன்னிலை வகித்தார்; ஜம்மு காஷ்மீர் அரசின் பிற அதிகாரிகளும் பங்கேற்றனர்.
என்.எச்.பி.சி நிறுவனமும் ஜம்மு காஷ்மீர் அரசின் கூட்டு நிறுவனமான ராட்லே புனல்மின் கழகமும் முறையே 51:49 சதவீத பங்குகளுடன் ராட்லே திட்டத்தை செயல்படுத்துகிறது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றில் 850 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட ராட்லே எச்இ திட்டம் அமைந்துள்ளது. இதற்கு 2021-ல் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது. மத்திய அரசு மொத்தம் ரூ. 5,281.94 கோடியை இத்திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது.
திவாஹர்