குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

1. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நான் நிகழ்த்தும் முதல் உரை இதுவாகும்.   இந்த அற்புதமான கட்டடம் அமிர்த காலத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வுடன் உள்ள இந்தக் கோயில், இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு ஒரு சான்றாக விளங்குகிறது.

நமது ஜனநாயக மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற தீர்மானம் இதில் எதிரொலிக்கிறது.

மேலும், 21-ம் நூற்றாண்டின் புதிய இந்தியாவுக்கான புதிய பாரம்பரியத்தை உருவாக்கும் உறுதிப்பாட்டை இது உள்ளடக்கியுள்ளது.

நமது சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைவதற்கான  கொள்கைகள் குறித்த ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இந்தப் புதிய கட்டடம் சாட்சியாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

2. இந்த ஆண்டு நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது ஆண்டாகும். 

 இந்தக் காலகட்டத்தில், சுதந்திரத்தின் 75-வது ஆண்டுக் கொண்டாட்டமான அமிர்தப் பெருவிழா நிறைவடைந்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

போற்றப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை நாடு நினைவுகூர்ந்தது.

 75 ஆண்டுகளுக்குப் பின், இளைய தலைமுறையினர் சுதந்திரப் போராட்ட காலத்தை மீண்டும் நினைவுகூர்ந்தனர்.

3.   இந்த இயக்கத்தின் போது:

‘எனது மண், எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் மண் அடங்கிய அமிர்த கலசம் தில்லிக்குக் கொண்டு வரப்பட்டது.

2 லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் நிறுவப்பட்டன.

3 கோடிக்கும் அதிகமானோர் ஐந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

70,000 க்கும் அதிகமான அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான “அமிர்தப் பூங்காக்கள்” உருவாக்கப்பட்டன.

இரண்டு கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டன.

16 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக் கொடியுடன் செல்ஃபிப்படம் எடுத்துப் பதிவிட்டனர்.

4.   அமிர்தப் பெருவிழாவின் போது,

“கடமைப் பாதையில்” நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை நிறுவப்பட்டது.

நாட்டின் அனைத்துப் பிரதமர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் தேசியத்  தலைநகரான தில்லியில் திறக்கப்பட்டது.

சாந்திநிகேதன், ஹொய்சள கோயில் ஆகியவை உலகப் பாரம்பரியப் பட்டியலில்  சேர்க்கப்பட்டன.

சாஹிப்ஜாதே நினைவாக  வீர பாலகர் தினம் அறிவிக்கப்பட்டது.

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் பெருமை தினமாக அறிவிக்கப்பட்டது.

பிரிவினையின் துன்பங்களை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14 –ம் தேதி “பிரிவினைத் துயர தினமாக”  அறிவிக்கப்பட்டது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

5. கடந்த ஆண்டு, இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் நிறைந்ததாக அமைந்தது. இந்தக் காலகட்டத்தில், நாட்டுமக்களின் பெருமிதத்தை  மேம்படுத்தும்  பல தருணங்கள் இருந்தன.

கடுமையான உலகளாவிய நெருக்கடிகளுக்கு இடையே, இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக உருவெடுத்தது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக  7.5 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தைத்  தொடர்ந்து  பராமரித்து வருகிறது.

நிலவின் தென் துருவத்தில் கொடியேற்றிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

ஆதித்யா விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியது. அது பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர்  தொலைவில்  உள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி-20 உச்சிமாநாட்டின் வெற்றி இந்தியாவின் உலகளாவிய   நிலையை  வலுப்படுத்தியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் முறையாக 100 பதக்கங்களை  வென்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100-க்கும் அதிகமான  பதக்கங்களை  வென்றுள்ளோம்.

இந்தியாவில்  மிகப்பெரிய  கடல்  பாலமான  அடல்  சேது  திறக்கப்பட்டது.

முதல்  நமோ  பாரத்  ரயிலும், முதல் அமிர்த பாரத்  ரயிலும் இயக்கப்பட்டன.

உலகின்  அதிவேக   5- ஜி சேவை கொண்ட நாடாக  இந்தியா  மாறியது.

இந்திய விமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய விமான ஒப்பந்தத்தை  நிறைவேற்றியது.

கடந்த ஆண்டு, எனது அரசு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை  வழங்கியுள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

6. கடந்த 12 மாதங்களில், எனது அரசு பல முக்கியமான சட்டங்களை அறிமுகப்படுத்தியது. 

இந்த சட்டங்கள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இயற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டங்கள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன.

30 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திவாஹர்

Leave a Reply