மனிதவள நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிவர்த்தி செய்வதன் மூலம் கடற்படை வீரர்களின் நிர்வாகம், செயல்திறன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக இந்தியக் கடற்படை 2024-ம் ஆண்டினைக் ‘கடற்படை நிர்வாக ஊழியர்கள் ஆண்டாக’ அறிவித்துள்ளது. நிர்வாக செயல்திறனை அதிகரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள், டிஜிட்டல் முன்முயற்சிகள், பொதுவான மற்றும் குறிப்பிட்ட பயிற்சித் திட்டங்கள் மற்றும் நலன் சார்ந்த நடவடிக்கைகளை 2024-ம் ஆண்டில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தியக் கடற்படையின் மொத்தப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினராக கடற்படை நிர்வாக ஊழியர்கள் உள்ளனர். அனைத்துக் களங்களிலும் கடற்படையின் செயல்திறனுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றனர். கட்டளைத் தலைமையகம், கப்பல்கட்டும் தளங்கள், கடற்படை ஆயுதக் கிடங்குகள், ஆயுத ஆய்வகங்கள், பயிற்சி நிறுவனங்கள், பல வகையான பிரிவுகள் போன்ற கடற்படையின் ஒட்டுமொத்த செயல்திறனில் இவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
கடற்படை வீரர்களின் செயல்திறன் மற்றும் பணி மீதான ஈர்ப்பை மேம்படுத்துவதற்காகக் கடந்த காலங்களில் பல முயற்சிகள் செயல்படுத்தப்பட்டன. இருப்பினும், அவர்களின் நிர்வாகம், பயிற்சி, நலன் போன்றவற்றிற்கு உத்வேகம் அளிப்பது அவசியமாகும். அப்போதுதான் இந்தியக் கடற்படை எப்போதும் போருக்குத் தயாரான, நம்பகத்தன்மை வாய்ந்த, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்கால ஆதாரம் கொண்ட படையாகத் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதில் பங்களிக்க முடியும். 2024 ஆம் ஆண்டினைக் கடற்படை நிர்வாக ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆண்டாக அறிவிப்பது இந்தத் திசையில் ஒரு முன்னெடுப்பாகும்.
எஸ்.சதிஸ் சர்மா