தேசிய காவலர் நினைவிடத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில், காவல்துறை தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு மாத கால நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

தில்லியில் உள்ள தேசிய காவல் நினைவகம் (NPM) என்பது தேசிய பாதுகாப்பிற்காக கடமையின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து மத்திய / மாநில காவல்துறையினரின் காவலர்களை கௌரவிப்பதற்கான முன்முயற்சியாகும். சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், தேசிய சொத்துக்களைப் பாதுகாத்தல், பேரழிவுகள் மற்றும் பிற அவசர நிலைகளை எதிர்த்துப் போராடி எல்லையிலும், உள்நாட்டுப்பகுதியிலும் பயங்கரவாதம் மற்றும் குற்றங்களுக்கு எதிராக போராடும் நமது காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நினைவகம் கம்பீரமாக நிற்கிறது.

காவல்துறைத் தியாகிகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கௌரவிக்கவும் ஒவ்வொரு வார இறுதியிலும் தேசிய காவலர் நினைவிடத்தில் ஒரு விழாவை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை ஒரு மாத காலம் நடத்தும் பொறுப்பு சுழற்சி முறையில் ஒரு மத்திய காவல் படையிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு 2024 பிப்ரவரி மாதத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது,

ஒரு மாத கால நிகழ்வின் தொடக்கமாக, ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் (RPF), நேற்று (2024 பிப்ரவரி 3) புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவகத்தில் காவலர் நினைவகத்தில் மலர் வளையம் வைத்தல், இசைக்குழு நிகழ்ச்சி போன்ற பல்வேறு நடவடிக்கைகளுடன் கொண்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா 2024 பிப்ரவரி மாதத்தின் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேசிய காவலர் நினைவிடத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையால் தொடர்ந்து நடத்தப்படும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply