தில்லியில் நான்கு நாட்கள் நடைபெற்ற தேசிய ஆரோக்கிய கண்காட்சி இன்று நிறைவடைந்தது – கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆயுஷ் அமைச்சகம் பொது சுகாதார சேவையில் முழுமையான கவனம் செலுத்தி வருகிறது: மத்திய இணை அமைச்சர் முஞ்சப்பாரா மகேந்திரபாய்.

தில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 4 நாட்கள் நடைபெற்ற தேசிய ஆரோக்கிய கண்காட்சி இன்று (04-02-2024) நிறைவடைந்தது. நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு முஞ்சப்பாரா மகேந்திரபாய் கலந்து கொண்டார்.

ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் நன்மைகளை வெளிப்படுத்துதல், விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் முழுமையான சுகாதார மற்றும் ஆரோக்கிய நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவித்தல், பயிற்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவித்தல், ஆயுஷ் அமைப்புகள் தொடர்பான தயாரிப்புகளின் வணிகத்தை ஊக்குவித்தல் ஆகிய பல அம்சங்களை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு முஞ்சப்பாரா மகேந்திரபாய், தேசிய ஆரோக்கிய கண்காட்சி என்பது ஆயுஷின் அனைத்து அம்சங்களிலும் ஆழமாக கவனம் செலுத்தும் நிகழ்வாகும் என்றார். ஆயுஷின் பல்வேறு அம்சங்கள் குறித்த குழு விவாதங்கள் அதற்கு கூடுதல் மதிப்பு சேர்த்துள்ளன என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply