பெண் ரோபோ “வியோம்மித்ரா” இஸ்ரோவின் “ககன்யான்” திட்டத்துக்கு முன்பாக விண்வெளிக்கு அனுப்பப்படும் – ஆளில்லா ரோபோ விமானம் “வயோம்மித்ரா” இந்த ஆண்டு செலுத்தப்படும் – “ககன்யான்” அடுத்த ஆண்டு செலுத்தப்படும்: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.

பெண் தோற்றம் கொண்ட விண்வெளி ரோபோ “வியோம்மித்ரா” இஸ்ரோவின் இந்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரோவின் லட்சியத் திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்துக்கு முன்னதாக இது விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றார். 

ஆளில்லா விண்வெளி விமானமான “வியோம்மித்ரா”-வை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  அதே நேரத்தில் மனிதர்கள் செல்லும் “ககன்யான்” திட்டத்தை அடுத்த ஆண்டு, அதாவது 2025-ல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

“வியோம்மித்ரா” என்பது விண்வெளி என்றும் “மித்ரா” என்பது நண்பர் என்றும் பொருள் என்று அவர் தெரிவித்தார். இரண்டு சமஸ்கிருத சொற்களிலிருந்து பெறப்பட்ட பெயர் இது என அவர் குறிப்பிட்டார். இந்த பெண் தோற்றம் கொண்ட ரோபோ, விண்வெளி அளவுருக்களை கண்காணித்தல், எச்சரிக்கைகளை வழங்குதல் போன்ற திறன் கொண்டது என்று அமைச்சர் கூறினார். இந்த ரோபோவால் ஆறு பேனல்களை இயக்குவது மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற பணிகளைச் செய்ய முடியும் என்று விண்வெளித் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply