இந்திய அரசின் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட சிந்தனைக் குழுவான இந்திய பெரு நிறுவன விவகாரங்கள் அமைப்பு, மும்பையில் உள்ள என்எஸ்இ தலைமையகத்தில் ‘இந்திய பெரு நிறுவனங்கள் நிர்வாக குழு மறுசீரமைப்பு: கண்காட்சி 2024’ -ன் தொடக்க பதிப்பை 2024 ஜனவரி 31அன்று நடத்தியது.
தேசிய பங்குச் சந்தை – என்எஸ்இ இந்தியா மற்றும் மும்பை பங்குச் சந்தை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த தொடக்க நிகழ்வு, இந்திய பெருநிறுவன ஆளுகையில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். முக்கிய வணிகத் தலைவர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் கார்ப்பரேட் ஆளுகை நிபுணர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பெருநிறுவன நிர்வாகத்தில் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை சுட்டிக்காட்டியது, வாரியம் புதுப்பித்தல், பன்முகத்தன்மை, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சிறப்பு முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை இந்தியாவின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரி திரு. அங்கித் சர்மா, பொருளாதார, சமூக, தனிநபர் மற்றும் சமூக இலக்குகளை சமநிலைப்படுத்துவதில் பெரு நிறுவன ஆளுகையின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். எதிர்கால உத்திப்பூர்வமான திசைகளுக்கு வாரிய அமைப்புகளில் பன்முகத்தன்மை மற்றும் தகவமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் இரண்டு நுண்ணறிவு குழு விவாதங்கள் இடம்பெற்றன.
‘இந்திய பெரு நிறுவனங்கள் நிர்வாக குழு மறுசீரமைப்பு: கண்காட்சி 2024’ இந்தியாவில் பெருநிறுவன ஆளுகை பற்றிய விவாதங்களில் ஒரு புதிய வரையறைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதன் நுண்ணறிவு மற்றும் உத்திகள் இந்திய நிறுவனங்களில் வாரிய அமைப்புகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் எதிர்காலத் திசையை கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.சதிஸ் சர்மா