மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் இன்று (07.02.2024) தில்லியில் இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையத்தின் புதிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆயுஷ் மருத்துவ முறைகளை தற்போது உலகம் பெரிய அளவில் அங்கீகரித்துள்ளது என்றார்.
ஆயுஷ் மருத்துவ முறைகளை உலகளவில் பிரபலப்படுத்துவதில் மத்திய அரசின் ஒட்டுமொத்த பங்கை ஆவர் எடுத்துரைத்தார். பொது சுகாதார சேவையில் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை மேலும் அதிகளவில் புகுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கப்பட்ட பிறகு, 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் இத்துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட நடவடிக்கைகளால் ஆயுஷ் மருத்துவம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரபலமடைந்து வருகிறது என்று திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
எம்.பிரபாகரன்