உலகப் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி 2024-ல் பங்கேற்பதற்காகப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் ரியாத் சென்றுள்ளார்.

உலகப் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி 2024-ல் பங்கேற்பதற்காகப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் ரியாத் சென்றுள்ளார். இது பாதுகாப்புத் துறையில் இந்தியாவிற்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் நட்புறவுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

2024 பிப்ரவரி 04 அன்று தொடங்கிய இக் கண்காட்சி ஐந்து நாட்கள்  நடைபெறுகிறது. 2024 பிப்ரவரி 08, அன்று முடிவடையும் இந்தக் கண்காட்சிக்காக மத்திய அரசின் சார்பாகப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சவுதி அரேபியாவின் தலைமைக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

2024 பிப்ரவரி 06, அன்று, சவுதி அரேபியா பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல்-சவுத்தை திரு அஜய் பட் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். திரு அஜய் பட், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் டாக்டர் கலீத் அல்-பயாரியுடனும் பேச்சு நடத்தினார். அவருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் பன்முகப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தார். கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகள், தொழில்நுட்பப் பரிமாற்றம், நிபுணத்துவப் பரிமாற்றம் உள்ளிட்ட பரஸ்பர அக்கறை உள்ள துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதில் இந்த விவாதங்கள் முக்கியத்துவம் கொண்டிருந்தன.

திவாஹர்

Leave a Reply