மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோதி பிரியாவிடை.

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

மக்களவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது என்றும், மாநிலங்களவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உயிர்ச் சக்தி பெறுகிறது என்றும் பிரதமர் கூறினார். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரியாவிடை நிகழ்ச்சி, புதிய உறுப்பினர்களுக்கு அழியாத நினைவுகளையும், விலைமதிப்பற்ற பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், “நீண்ட காலமாக அவையையும், நாட்டையும் வழிநடத்தி வருவதால், நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த ஒவ்வொரு விவாதத்திலும் அவர் இடம்பெறுவார்” என்று கூறினார். வழிகாட்டும் விளக்குகளாகத் திகழும் இத்தகைய மதிப்புமிக்க உறுப்பினர்களின் அனுபவங்கள் மற்றும் நன்னடத்தையை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார். முன்னாள் பிரதமர் சக்கர நாற்காலியில் அமர்ந்து அவையில் வாக்களித்ததை, ஒரு உறுப்பினர் தமது கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பதற்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக இருந்தது என்று பிரதமர் நினைவு கூர்ந்தார். ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கவே அவர் வந்தார் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் கூறினார். அவர் நீண்ட, ஆரோக்கியமான ஆயுளுடன் வாழப் பிரதமர் மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பொதுத் தளத்திற்குப் புறப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவை அனுபவத்திலிருந்து பெரிதும் பயனடைவார்கள் என்று பிரதமர் கூறினார். “இது ஆறு ஆண்டு பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகம். இது அனுபவங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியேறும் எவரும் செழுமைப்படுத்தப்பட்டு தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை வலுப்படுத்துகிறார்கள்” என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply