சென்னை விமான நிலைய முனையத்தில் வானூர்தி பாலங்கள் இல்லாததாலும், பிற செயல்பாட்டு வரம்புகளாலும் பல நீண்ட தூர அகலமான சர்வதேச விமானங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்று ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையல்ல, துல்லியம் இல்லாதவை.
சென்னை விமான நிலைய முனைய வளாகத்தில் 13 வானூர்தி பாலங்கள் உள்ளன. மேலும் குறியீடு இ-க்கான கூடுதலாக ஒரு வானூர்தி பாலம் கட்டுமானத்தில் உள்ளது. இது 2024, மார்ச் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
13 வானூர்தி பாலங்களில் 5 வானூர்தி பாலங்கள் கோட் இ-க்கு வரும் விமானங்கள் சேவையை பூர்த்தி செய்ய முடியும்.
T2-ன் 2-வது கட்டப்பணிகள் 2025-ல் முடிந்ததும், கூடுதலாக 3-வது குறியீடு இ திறன் கொண்ட வானூர்தி பாலங்கள் விரைவில் திறக்கப்படும்.
எனவே, 2025-க்குப் பிறகு, சர்வதேச செயல்பாடுகளுக்கான கோட் இ விமானங்களுக்கு 9 வானூர்தி பாலங்கள் ஸ்விங் முறையில் கிடைக்கும்.
செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள விமானம் ஏ380 என்பது கோட்-எஃப் வகை விமானங்களில் முதன்மையானது. அதன் உற்பத்தி 2021 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை அகலமான அமைப்பைக் கொண்ட நீண்ட தூர விமானங்களான ஏ 350 மற்றும் பி 777 ஆகியவை கோட்-இ வகை விமானங்களாகும். அவற்றை சென்னை விமான நிலையத்தால் கையாள முடியும்.
திவாஹர்