ஜாமினில் வெளியே வருவதற்கு தடையாக இருக்கும் இலாகா இல்லாத மந்திரி பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி!

பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 243 நாட்களாக சிறைச்சாலையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து நீடித்து வந்தார். இதனால் இவரது ஜாமீன் மனு தொடர்ந்து பலமுறை தள்ளுபடி ஆனது.

இவருக்கு ஜாமீன் கிடைக்காததற்கு முக்கிய காரணமே இந்த இலாக இல்லாத மந்திரி பதவி தான் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் கிடைப்பதற்கு பெரும் தடையாக இருக்கும் இந்த இலாகா இல்லாத அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.

இதை அடுத்து ஆளுநருக்கு, தமிழக முதலமைச்சர் அனுப்பிய பரிந்துரையை ஏற்று இலாகா இல்லாத அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2024/01/13/94427/

Leave a Reply