அரசு மின்னணு சந்தை 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து அதில் கொள்முதல் செய்யப்பட்ட மொத்த வணிக மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைக் கடந்த அமைச்சகமாக பாதுகாப்பு அமைச்சகம் திகழ்கிறது.
நடப்பு நிதியாண்டில், 13.2.2024 நிலவரப்படி அரசு மின்னணு சந்தை மூலம் சுமார் ரூ.46,000 கோடி மதிப்புள்ள கொள்முதல் ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் மதிப்பு ரூ.28,732.90 கோடியாகவும், 2021-22-ம் நிதியாண்டில் ரூ.15,091.30 கோடியாகவும் இருந்தது. முந்தைய நிதியாண்டை விட 60 சதவீதம் அதிகரித்திருப்பது, பாதுகாப்பு அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கும், கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு மின்னணு சந்தை தளத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள உறுதிப்பாட்டிற்கும் ஒரு சான்றாகும்.
நாடு முழுவதும் இருந்து 19,800-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தளவாடப் பொருட்களை வாங்கும் நிறுவனங்கள் அரசு மின்னணு சந்தைக்கு 5.47 லட்சத்துக்கும் மேற்பட்ட கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்கியுள்ளனர். இதில் ஆர்டர்களில் சுமார் 50% குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
எம்.பிரபாகரன்