மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST), மத்திய கலால் மற்றும் சுங்கம், போபால் மண்டலம், 2024 பிப்ரவரி 15-16 தேதிகளில் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் சுங்க விஷயங்கள் குறித்த அனைத்து தலைமை ஆணையர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால் தலைமை ஆணையர்கள் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில் சுங்கத்துறை உறுப்பினர் திரு. அருணா நாராயண் குப்தா, உறுப்பினர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் வரி செலுத்துவோர் சேவை); டிஆர்ஐ தலைமை இயக்குநர் திரு மோகன் குமார் சிங்; சுங்க மண்டலங்களின் தலைமை / தலைமை ஆணையர்கள் மற்றும் சிபிஐசி இயக்குநரகங்களின் முதன்மை தலைமை இயக்குநர்கள் / தலைமை இயக்குநர்கள் ; சிபிஐசி மற்றும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) உள்ளிட்ட பிற துறைகளின் அதிகாரிகள்; இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) ; மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) ; வனவிலங்கு கட்டுப்பாட்டு குற்றவியல் பணியகம் (WCCB) ; ஜிஎஸ்டி நெட்வொர்க் (ஜிஎஸ்டிஎன்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு சுங்கச் செயல்பாடு மற்றும் வணிகச் செயல்முறை எளிமைப்படுத்தல், ஆட்டோமேஷன், இந்தியாவின் 2047 என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கி உள்கட்டமைப்பு ஆகியவற்றின் கூடுதல் தேவைகள் குறித்து விவாதம் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு தளத்தை வழங்கியது. இந்திய சுங்கத் துறை 2022-23 நிதியாண்டில் தோராயமாக ரூ.2.13 லட்சம் கோடி (இறக்குமதி மீதான ஐஜிஎஸ்டி வரிகள் தவிர) வசூலித்துள்ளது மேலும்,ரூ.6,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
சிபிஐசி தலைவர் தனது முக்கிய உரையில், செயல்முறைகளின் தரப்படுத்தலின் அவசியத்தை எடுத்துரைத்தார். செயல்திறனை அடைய நமது அனைத்து நடவடிக்கைகளிலும் ‘சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்’ என்ற வழியை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
33 சர்வதேச விமான நிலையங்கள் / விமான சரக்கு வளாகங்கள், 63 துறைமுகங்கள், 126 ஒருங்கிணைந்த ரயில் நிலையங்கள், 11 சர்வதேச ரயில் நிலையங்கள் மற்றும் 28 வெளிநாட்டு தபால் அலுவலகம் (எஃப்.பி.ஓ) உட்பட சுமார் 320 துறைமுகங்களை சுங்கத் துறை நிர்வகித்து வருகிறது. மாநாட்டின் இரண்டாவது நாள் சுங்க செயல்பாடுகளில் ‘இணக்கத்தை எளிதாக்குதல்’ என்பதை மையமாகக் கொண்டது, இதில் தொழில்நுட்பம், பல்வேறு அரசுத் துறைகளுடன் சுங்க ஈடுபாடு, வர்த்தகத்திற்கான செயல்முறைகளை எளிமைப்படுத்துதல் போன்றவை அடங்கும். சுங்க செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்ப தேவைகளைப் பயன்படுத்துவது மற்றும் சுங்க ஆட்டோமேஷனில் உருமாறும் அணுகுமுறை ஆகியவை விவாதிக்கப்பட்டன. செயல்முறை தரப்படுத்தல், மேம்பட்ட குறை தீர்ப்பு மற்றும் வர்த்தக வசதிக்கு உதவக்கூடிய தளவாட மேம்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சிபிஐசி தலைவர் நாடு முழுவதும் இந்திய சுங்கத் துறை மேற்கொண்டுள்ள பணிகளை அங்கீகரித்து பாராட்டியதுடன், உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பரிந்துரைத்தார்.
மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சிபிஐசி தலைவர் நன்றி தெரிவித்தார். புதுமையான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும், தீர்வுகளைக் கண்டறிய இளம் மனங்களின் திறமைக் குளத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உறுப்பினர் சுங்கத்துறை சுட்டிக்காட்டியது.
மேம்பட்ட வர்த்தக வசதிக்காக செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கு இடையே தடையற்ற தொடர்பை உறுப்பினர் (தகவல் தொழில்நுட்பம்) வலியுறுத்தினார். நிறைவில், போபால் தலைமை ஆணையர் திரு சி.பி.கோயல், மாநாட்டில் கலந்து கொண்டு அதை வெற்றிகரமாக்கிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, போபால் மண்டல தலைமை ஆணையர் திரு சந்திர பிரகாஷ் கோயல், இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பிரமுகர்களையும், பங்கேற்பாளர்களையும் வரவேற்றார்.
திவாஹர்