நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக மும்பையில் 2-வது தொழில்துறை கலந்துரையாடலுக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது .

ஹைதராபாத்தில் 2024 பிப்ரவரி 16 நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான தொழில் துறை கலந்துரையாடலை நிலக்கரி அமைச்சகம் வெற்றிகரமாக நடத்தியது.  இதையடுத்து  நாளை (2024 பிப்ரவரி 21) மும்பையில் மற்றொரு கலந்துரையாடலை நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு உள்ளது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு அம்ரித் லால் மீனா இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களின் வளர்ச்சியையும், பரவலாக்கலையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டின் எதிர்கால எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தின்படி, அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான திட்டங்கள் என 3 பிரிவுகளின் கீழ் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுமயமாக்கும் திட்டங்களுக்கு நிலக்கரி அமைச்சகம் ரூ. 8,500 கோடி முதலீட்டு செலவை வழங்கும்.

நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பது, எரிசக்தி ஆதாரங்களை பல்வகைப்படுத்துதல், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்த்தல் ஆகியவற்றில் அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும், ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் நிலக்கரி அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை இந்த முயற்சி எடுத்துக் காட்டுகிறது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவும், இந்தியாவில் எரிசக்தியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்களிக்கவும் ஆர்வமுள்ள அனைத்து பங்குதாரர்களையும் நிலக்கரி அமைச்சகம் அழைத்துள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply