இயற்கையை மேம்படுத்துதல், வளர்ச்சியை மேம்படுத்துதல்: நிலக்கரி சமூகங்களின் நலனுக்காக நிலையான பசுமை முயற்சிகள் மூலம் நிலக்கரி துறை நிலப்பரப்புகளை மாற்றியமைத்தல் .

நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நிலக்கரி/பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காலப்போக்கில் அவற்றின் உற்பத்தி அளவை அதிகரித்தன. இது மட்டுமல்லாமல், பல்வேறு நிலையான நடவடிக்கைகளை செயல்படுத்தி உள்ளூர் மட்டத்தில் சுற்றுச்சூழலுக்கான தங்கள் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளன. நிலையான பசுமைமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் பல்வேறு தளங்களில் விரிவான தோட்டங்கள் அமைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன, அறிவியல் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பின் மூலம், தோட்டம் அமைக்கும் முயற்சிகளில் தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தளங்களின் அபிவிருத்தி மற்றும் பல அடுக்கு தோட்டத் திட்டங்களை செயல்படுத்த உதவுகிறது.

நிழல் தரும் மரங்கள், வனவியல் நோக்கங்களுக்காக மருத்துவ மற்றும் மூலிகைச் செடிகள், பழ மரங்கள் மற்றும் அலங்கார, அவென்யூ தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாறுபட்ட அணுகுமுறையை இந்த மரம் நடும் திட்டம் பின்பற்றுகிறது. பழம் தரும் இனங்கள், மருத்துவத் தாவரங்களுடன், பல்லுயிர் பாதுகாப்பிற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் சமூகங்களுக்கு கூடுதல் சமூக-பொருளாதார நன்மைகளையும் வழங்குகின்றன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply