2023 டிசம்பர் மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரி துறையின் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12=100) 139.4 ஆக உள்ளது, இது 2022 டிசம்பர் மாத நிலையுடன் ஒப்பிடும்போது 5.1% அதிகமாகும். இந்திய சுரங்கத் துறையின் (IBM) தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல்-டிசம்பர், 2023-24 காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 8.5% சதவீதமாகும்.
2023 டிசம்பரில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு: நிலக்கரி 929 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 40 லட்சம் டன், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், இரும்புத் தாது 255 லட்சம் டன், சுண்ணாம்புக்கல் 372 லட்சம் டன், பயன்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு 3078 மில்லியன் கன மீட்டர், பாக்சைட் 2429 ஆயிரம் டன், குரோமைட் 235 ஆயிரம் டன், தாமிர அடர் 11 ஆயிரம் டன், ஈய அடர் 35 ஆயிரம் டன், மாங்கனீசு தாது 319 ஆயிரம் டன், துத்தநாக அடர் 148 ஆயிரம் டன் , பாஸ்போரைட் 117 ஆயிரம் டன், மேக்னசைட் 16 ஆயிரம் டன், தங்கம் 122 கிலோ ஆகும்.
2022 டிசம்பரை விட 2023 டிசம்பர், 2023 இல் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கியமான கனிமங்கள் பின்வருமாறு: மேக்னசைட் (83.7சதவீதம்), ஈய அடர் (16.5 சதவீதம்), பழுப்பு நிலக்கரி (14.6சதவீதம்), தாமிர கான்க் (13.7சதவீதம்), சுண்ணாம்புக்கல் (12.5 சதவீதம்), நிலக்கரி (10.8 சதவீதம்), துத்தநாக கான்க்.(7.8 சதவீதம்), பாக்சைட் (6.6சதவீதம்), இயற்கை எரிவாயு (6.6 சதவீதம்), மாங்கனீசு தாது (4.0சதவீதம்) மற்றும் இரும்புத் தாது (1.3சதவீதம்), மற்றும் எதிர்மறை வளர்ச்சியைக் காட்டும் பிற முக்கிய தாதுக்கள் பின்வருமாறு: பெட்ரோலியம் (கச்சா) (-1.0சதவீதம்), தங்கம் (-29.9 சதவீதம்), குரோமைட் (-30.8 சதவீதம்), பாஸ்போரைட் (-31.2 சதவீதம்) மற்றும் வைரம் (-74.4 சதவீதம்).
திவாஹர்