ஒடிசாவின் கந்தமால் மற்றும் கஞ்சம் மாவட்டத்தில் 26.96 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை -59 ஐ அகலப்படுத்தி வலுப்படுத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ. 718.26 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார் .

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசாவில், கந்தமால் மற்றும் கஞ்சம் மாவட்டத்தை உள்ளடக்கிய தேசிய நெடுஞ்சாலை -59-ல் உள்ள தாரிங்பாடி மலைத்தொடர் பிரிவை அகலப்படுத்தவும் வலுப்படுத்தவும் ரூ.718.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தத் திட்டம் மொத்தம் 26.96 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாகும்.

குறுகிய வளைவுப் பாதை காரணமாக இப்பிரிவு தற்போது சவால்களை எதிர்கொள்கிறது என்று திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு ஒடிசாவிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 59-ஐ தவிர்த்து வேறு பாதையில் செல்லவேண்டியுள்ளது. தற்போது இதை மேம்படுத்துவதன் மூலம்  அந்த நெடுஞ்சாலையில் தரம் உயர்த்தப்படுவதுடன், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அனைத்து வானிலைகளிலும் போக்குவரத்து இணைப்பு உறுதி செய்யப்படும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply