மத்தியப் பிரதேசத்தில் ரூ.3549.48 கோடி செலவில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமைப்பதற்கும், வலுப்படுத்தவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.
செஹோர், ரெய்சன் மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை-146 பி பிரிவில் 41 கி.மீ. தொலைவிலான 4 வழிப்பாதை அமைப்பதற்கு ரூ.776.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்திட்டங்கள் ஜபல்பூர், போபால், பெட்டுல், இந்தூர் நகரங்களுக்கு செல்வதற்கான பயண தூரத்தை குறைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கட்டப்படும் புறவழிச்சாலை மூலம் நகரங்களில் வர்த்தகப் போக்குவரத்து குறைவதன் மூலம் விபத்துகள் குறையும் என்று திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
திவாஹர்