பெரிலியம், காட்மியம், கோபால்ட், காலியம், இண்டியம், ரேனியம், செலினியம், டாண்டலம், டெல்லுரியம், டைட்டானியம், டங்ஸ்டன், வனாடியம் ஆகிய 12 முக்கிய, உத்திசார்ந்த கனிமங்களுக்கான ராயல்டி விகிதத்துக்கான, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம், 1957-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கிளாக்கோனைட், பொட்டாஷ், மாலிப்டினம், பிளாட்டினம் ஆகிய 4 முக்கிய கனிமங்களின் ராயல்டி விகிதத்தை 2022 மார்ச் 15 அன்றும், லித்தியம், நையோபியம், பூமியின் அரிய தனிமங்கள் ஆகிய 3 முக்கிய கனிமங்களின் ராயல்டி விகிதத்தை 2023 அக்டோபர் 12 அன்றும் அரசு அறிவித்தது.
திவாஹர்