ஆயுஷ் சுகாதார வசதிகளுக்கான இந்திய பொது சுகாதார தரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார் .

ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான தருணம் வந்துவிட்டது என்று ஆயுஷ், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்  இணைந்து ஏற்பாடு செய்திருந்த மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

பாரம்பரிய சுகாதாரப் பராமரிப்பு எதிர்காலத்தில் புதிய நவீனத்துடன் இருக்கும் என்று அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க பயணத்தை மேற்கொண்டதற்காக ஆயுஷ் அமைச்சகத்திற்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். ஆயுஷ், சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்துள்ளது என்று அவர் கூறினார்.

ஆயுஷ் மருந்து துறையில் கூட்டு ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர், இது பாரம்பரிய அறிவுசார் மற்றும் நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதாகத் தெரிவித்தார். சுகாதாரப் பராமரிப்புக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.  

ஆயுர்வேதம், அலோபதி ஆகிய இரு துறைகளிலிருந்தும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற அரசு ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறது என்று  டாக்டர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.  

இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் சுகாதார வசதிக்கான இந்திய பொது சுகாதார தரநிலைகள் தொடக்கம் மற்றும் ரத்தசோகை சிகிச்சைக்கான பன்னோக்கு மருத்துவச் சோதனை மையம் உள்ளிட்டவற்றில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்  மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இடையேயான மிகப்பெரிய கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ‘ஆயுர்வேதமே அமிர்தம்’ என்ற நிகழ்ச்சி குறித்த  29-வது தேசிய கருத்தரங்கு, தேசிய ஆயுர்வேத வித்யா பீடத்தின் 27-வது பட்டமளிப்பு விழா ஆகியவையும் நடைபெற்றன.

எம்.பிரபாகரன்

Leave a Reply