கார்வாரில் உள்ள கடற்படை தளத்தில் 2 பெரிய கப்பல் துறைகள், கடற்படை அதிகாரிகளுக்கான 320 வீடுகள், 149 பாதுகாப்பு சிவிலியன் பணியாளர்கள் ஆகியோருக்கான தங்கும் விடுதிகள் அடங்கிய 7 குடியிருப்பு வளாகங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மார்ச் 5-ம் தேதி திறந்து வைக்கிறார்.
கடற்பறவைத் திட்டத்தின் முதல் கட்டம் 10 கப்பல்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு 2011-ல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. உள்கட்டமைப்பில் தடுப்புச் சுவர், 10 கப்பல்களை நிறுத்தும் திறன் கொண்ட ஒரு கப்பல், 10,000 டன் கப்பல் லிப்ட் மற்றும் உலர் பெர்த், ஒரு கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் யார்டு, தளவாடங்கள் மற்றும் ஆயுத சேமிப்பு வசதிகள், 1000 பணியாளர்களுக்கான தங்குமிடம், ஒரு தலைமையகம் / கிடங்கு அமைப்பு மற்றும் 141 படுக்கைகள் கொண்ட கடற்படை மருத்துவமனை ஆகியவை அடங்கும்.
32 கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், 23 யார்டு கிராஃப்ட் கப்பல்களைக் கொண்ட IIA திட்டத்துக்கு பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இந்திய பசுமை கட்டட கவுன்சில் ஆகியவற்றால் வகுக்கப்பட்ட தற்போதைய வழிகாட்டுதல்களுக்கு இணங்க கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் இத்திட்டத்தில் கட்டப்படுகின்றன.
இரண்டாம் கட்டத்தில், அதிகாரிகள், முதுநிலை மற்றும் இளநிலை மாலுமிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான அனைத்து வகையான குடியிருப்புகளுடன், குடியிருப்புகளை உள்ளடக்கிய நான்கு வெவ்வேறு நகரங்களியங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2700 மீட்டர் ஓடுபாதை மற்றும் பொதுமக்கள் உறைவிடத்துடன் கூடிய பசுமை கள இரட்டை பயன்பாட்டு கடற்படை விமான நிலையம் அமைப்பது, பல்வேறு கப்பல்களில் ஏறும் விமானங்களுக்கு விமான ஆதரவு மற்றும் வணிக விமானங்களின் செயல்பாடுகளை எளிதாக்கும்.
திவாஹர்