அமைப்புசாரா சிறு, குறு நிறுவனங்கள் உதயம் உதவிச் சான்றிதழை பெறுவதற்கு பதிவு செய்ய வழிவகுக்கும் உதயம் உதவித் தளம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி மத்திய குறு, சிறு, நடுத்தரத் நிறுவனங்கள் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி அமல்படுத்தும் முகமையாக இருக்கிறது. ஜிஎஸ்டி எண் இல்லாத அமைப்புசாரா குறு நிறுவனங்கள் உதயம் உதவி தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றன. கடந்த 14 மாதங்களில் உதயம் உதவி தளத்தில் அமைப்புசாரா குறுநிறுவனங்களின் மொத்த பதிவு 1.50 கோடியை தாண்டியுள்ளது.
2023ம் ஆண்டு மார்ச் 20ம் தேதியிட்ட மத்திய அரசின் அறிவிக்கையில், உதயம் தளத்தின் மூலம் அமைப்புசாரா குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் உதயம் பதிவு சான்றிதழ் முதன்மைக் கடன் வழங்கும் துறையின் பலன்களின் நோக்கத்துக்கானது எனக் கருதப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, 2023ம் ஆண்டு மே 9ம் தேதியிட்ட ஆர்பிஐ சுற்றறிக்கையில் உதயம் உதவிச் சான்றிதழைக் கொண்ட முறைசாரா குறு நிறுவனங்கள் , சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் முதன்மைக் கடன் வழங்கும் துறையின் நோக்கத்துக்காக வகைப்படுத்தப்பட்டுள்ள குறு நிறுவனங்களாக கருதப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எம்.பிரபாகரன்